![](https://minnal24.com/wp-content/uploads/2025/02/Untitled-design-2025-02-06T122257.864.png)
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் விபத்து: ஒருவர் பலி
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி முருகன் கோயில் பின் வீதியுள்ள வீரக்குட்டி ரமேஷ் (வயது – 39 ) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக பெற்றோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுஸர் வாகனம் தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவுஸர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்