மட்டக்களப்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவேறியது.
மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் 19 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேறியது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு 22 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகின.
மேலும், 8 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததுடன், 1 சபைக்கு சமூகமளிக்கவில்லை.