வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை வாத்திரவெட்டை மயில்தங்கியமலை திருவருள்மிகு ஆதி பரமேஸ்வரி உடனுறை நந்தீச்சரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவின் எண்ணைக்காப்பு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விநாயகர் பூஜை வழிபாட்டோடு ஆரம்பிக்கப் பட்டு பிற்பகல் 04.00 மணிவரை எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மயில்தங்கியமலை நந்தீச்சரபெருமானுக்கு செந்தமிழ் ஆகம முறைப்படி தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு எண்ணைக்காப்பு சாற்றுதல் நடைபெற்றது.
மேலும் இன்றைய தினம் நடைபெற்ற எண்ணைக்காப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் கலந்து கொண்டதுடன் பெருமளவான சிவனடியார்கள் வருகைதந்து நந்தீச்சர பெருமானுக்கு எண்ணைக்காப்பு சாற்றினர்.
எண்ணைக்காப்பு சாத்தப்பட்டதும் இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி நடைபெற்று மாலை 5 மணி அளவில் நான்காம் கால வேள்வி, அருள் ஊட்டல் என்பன நடைபெற்று நிறைவடைந்தது.
திருக்குடமுழுக்குப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை 8.00மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Beta feature
