மட்டக்களப்பு – பெண்மணி சர்வதேச விருதினை பெற்றுள்ளார்

அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் “வுமன் ஐக்கன்” (Women Icon) எனும் நிறுவனத்தினால் “வளர்ந்து வரும் உதவும் கரங்கள்” (Best Emerging Helping Hands) எனும் விருதிற்கு , மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி. ஜானு முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான LIFT  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நிர்வாகியுமான இவர் சமூக சேவையில் பெண் தலைமைத்துவம் எனும் போட்டிப் பிரிவில் “வளர்ந்து வரும் உதவும் கரங்கள்” எனும் இந்த விருதை வென்றுள்ளார்.

கொரோனா பெரும் தொற்று பொது முடக்கத்தின் போது மக்களுக்காக நேரடியாக களத்தில் நின்று செயற்பட்டமைக்காக,  இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“வுமன் ஐக்கன்” விருது என்பது தமது தனித்துவமான வழியில் வினைத்திறனுடன் செயலாற்றும் பெண்களைக் கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.