மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்து மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான புதிர் எடுத்தல் நிகழ்வானது ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம்பெற்றது.
சிவசிறி நந்தகோபால குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலயத்தின் செயலாளர் உட்பட அடியார்கள் கலந்துகொண்டனர்.