மட்டக்களப்பு பகுதியில் உள்ள சில கிராமங்களில் மின் தடை: மக்கள் சிரமம்
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்லடிவெட்டை, கானாந்தனை போன்ற இன்னும் சில கிராமங்களுக்கான மின்சாரம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடைப்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமங்களுக்கான மின்சாரம் 2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மின்சார தூண்கள் சாய்ந்ததினால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் யானைகளின் தொல்லை அதிகமாக உள்ளதுடன், வீடுகள், பயன் தரும் மரங்களை யானைகள் சேதப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை உரிய அதிகாரிகள் பிரதேசத்திற்கான மின் இணைப்பினை பெற்றுத் தருமாறும் மின்சார சபையின் வாகனங்கள் வருவதற்காக தங்களுடைய கிராமத்திற்கான பாதையினை தாங்கள் சீர் செய்து உள்ளதாகவும் பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்