மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணி போன்று நடித்து மோசடி செய்த நபரை, எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை அணிந்து, நீதிமன்றத்துக்குள் நுழைந்து, வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன், சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை, கடந்த நவம்பர் 8ம் திகதி, ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.