மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனிவெகு விமர்சையாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
தேத்தாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோசங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.