-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பேருந்தை காட்டு யானைகள் தாக்கி சேதம் விளைவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது ஒட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்தே காட்டு யானைகள் இவ்வாறு தாக்கியுள்ளது.
கல்முனை நோக்கி பயணித்த குறித்த பேருந்து தியாவட்டவான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது குறித்த பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக நிற்பதை அவதானித்த பேருந்து சாரதி பேருந்தை நிறுத்தியுள்ளார். எனினும் குறித்த கூட்டத்திலிருந்த சில யானைகள் பேருந்தின் முன் பகுதியை தாக்கி சேதம் விளைவித்துள்ளது.
இதன் போது பேருந்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.