வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய குரு பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
தைப்பூச நிகழ்வில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாகத்தினரால் பூஜைகளின் பின் அருகிலுள்ள வயற்காணியில் புதிர் அறுவடை நிகழ்வு ஆலயக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடதக்கது.