மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

-வாழைச்சேனை நிருபர்-

இந்து மக்கள் புதிய வருடத்தில் தைப்பொங்கலை அடுத்து வரும் தைப்பூசத் தினத்தில் கடந்த வருடம் மேற்கொண்ட பெரும் போக வேளாண்மையில் இருந்து பெற்ற நெற் கதிர்களை ஆலய வழிபாடுகளின் பின் தமது இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டு புதிரெடுக்கும் சடங்கு இந்த தைப்பூச நாளில் இடம்பெறுவது ஐதீகம் புதிய வருடத்தில் குறைவில்லாத அன்னலட்சுமியின் அருட் கடாட்சம் பெறும் நோக்கில் இந்து மக்களினால் இவ் வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கமாகும்.

இதேவேளை மட்டக்களப்பு சகல இந்து ஆலயங்களிலும் இன்று வியாழக்கிழமை  இந்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு கொத்து குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் பழைய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்டு புதிர் எடுத்து கருவறையில் வீற்றிருக்கும் அம்மனின் காலடியில் வைத்து விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

அதன் பின் ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் நெற்கதிர்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய இந்த விஷேட வழிபாட்டு நிகழ்வுகளில் மாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.