மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் 3492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காத்தான்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் சட்டவிரோதமாக வைத்திருந்த 3492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருதாக பொலிஸார் தெரிவித்தனர்.