கலை இலக்கிய செயற்பாட்டளர்களுக்கான கலைஞர் கூடல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.
கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய இந்நிகழ்விற்கு கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் தலைமை தாங்கினார்.
இதன்போது காலை 9 மணி முதல் மலை 4 மணிவரை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லீம் கலைஞர்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடதக்கது.