மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுஇ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்று புதன் கிழமை அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
மேலும் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நிண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன், யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இதுவரையில் நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.