மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய தினம் சனிக்கிழமை கோலாகலமான முறையில் நடைபெற்றது.
மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வீதி நுழைவாயில் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபவனி ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து நடைபவனி அரசடிதீவுலிருந்து ஆரம்பமாகி, கொக்கட்டிச்சோலை பிரதான வீதி ஊடாக மகிழடித்தீவு, பண்டாரியாவெளி,கடுக்காமுனை ஊடாக பிரதான வீதிகளூடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இதன் போது ப்லாயிரக்கணக்கான பழைய மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.





