களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்று சனிக்கிழமை விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டு கல்முனை சாலை வழியே குருநாகல் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. இப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



