மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு பார் வீதி மாமாங்கம் பகுதி கூளாவாடி பகுதி போன்றவற்றை பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இவ்வீதிகளில் உள்ள வடிகான்களில் குப்பைகள் அடைத்து கொண்டு நீர் செல்ல வழியில்லாமல் நீர் வீதிகளில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை காலம் வருவதற்கு முன்னரே மட்டக்களப்பு மாநகர சபையால் வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் வடிகான்களில் அடைப்பு காணப்படுவதால் நீர் வழிந்தோட முடியாமல் வீதிகள் வெள்ளத்தில் தாழ்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.