மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் “நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்” என்ற நூல் இன்று காலை 10.30 மணியளவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ந.குணசிவருபன் எழுதிய “நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்” என்னும் கவிதை நூல் வெளியீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் ந.தனஞ்செயன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி.வ.குணபாலசிங்கம் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. த. மேகராசா கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் தீபச்செல்வன், மட்டக்களப்பு தமிழ் சங்கம் வாழ்நாள் உறுப்பினர் சாந்தி முகைதீன், இலங்கை ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் உதவிப்பணிப்பாளர் கலாநிதி. ச. மோசேஸ், தொழில் முனைவர் ந.ஜெகதீசன், முகாமையாளர் தே.விசுகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்