மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நவீன ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
சின்ன உப்போடை வாவிக்கு அருகாமையில் உள்ள குப்பை திடலிலேயே இன்று ஞாயிற்று கிழமை காலை இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் நவீன கைக்குண்டு மீட்பு