மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மழையுடனான வானிலையால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரான் பகுதியில் கோரகல்லிமாடு, புலிபாய்ந்தகல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து பாதிப்பினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.




