-கிரான் நிருபர்-
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் பயங்கரவாத தடை சட்டம் இரத்து வேண்டும் எனக் கோரி கையெழுத்து வேட்டை நேற்று வியாழக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் (அரகல) ஏற்பாட்டில் காத்தான்குடி குட்வின் சந்தியில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பள்ளி பொருட்கள், மீதான வற் வரியை நீக்கு என்றும் இவ் அரசு உறுதிஅளித்தபடி பயங்கரவாத தடை சட்டத்தினை இரத்து செய் என கோரியே கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
குறித்த கையெழுத்து போராட்டம் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.