மட்டக்களப்பு புத்தூர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
புத்தூர் பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதுடன் இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்டுள்ளதுடன் தலைமறைவாகிவந்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் ரி. கிருபாகரன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அங்கு 3100 மில்லிக்கிராம ஜஸ்போதை பொருளுடன் ஒருவரையும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.