மட்டக்களப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாணவிக்கு காதலை தெரிவித்த மாணவனை கண்டித்த அதிபருக்கு எதிராக புகார் வழங்கப்பட்டுள்ளதுடன் மாணவன் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஆண், பெண் பிள்ளைகள் கற்று வரும் கலவன் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் சக மாணவிக்கு தனது காதலை வெளிப்படுத்துவதற்காக ஐ லவ் யு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவி இது தொடர்பில் அதிபரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அதிபர் குறித்த மாணவனை அழைத்து பிரம்பால் கண்டித்து ஒழுக்கமாக நடக்குமாறு கூறி எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவன் அதிபர் தன்னை தண்டித்ததாக பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர் மாணவனை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.