மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நாட்டில் மது, புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் தற்போதைய நிலை, கொள்கை நிலைமை குறித்து ஆராயப்பட்டது.

ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் தற்போது வரையிலும் ஆல்கஹால் கம்பனிகள் தங்களது உற்பத்திகளின் விற்பனைகளை மேம்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள யுக்கிகள், ஆல்கஹால் மற்றும் சிகரெட்டுகளால் கிடைக்க பெற்றுள்ள வரிவருமானங்களும் மற்றும் அவற்றின் பாதிப்புக்களால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவீனங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இவ்வாறான போதைப்பொருட்களால் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை மட்டுமல்லாது உடல்நலமும் குன்றுவதாகவும் அவற்றின் பாரதூரங்கள் பற்றி மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக எவ்வாறு வெளிகொண்டு வருவது என்பது பற்றியும் பேசப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்