மட்டக்களப்பில் இடம்பெற்ற சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பில் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய் கிழமை பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்திய மாபெரும் பத்மநாபா ஞாபகார்த்த சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்த சுற்றில் ஏறாவூர் வை.எஸ்.எஸ் கழகத்திற்கும் லைட்கௌஸ் கழகத்திற்கு இடையில் இடம்பெற்ற சுற்று போட்டியில் வை.எஸ்.எஸ் கழகம் 8 கோல்களையும் லைட்கௌஸ் கழகம் ஒரு கோலை பெற்று இறுதி போட்டிக்கு ஏறாவூர் வை.எஸ்.எஸ் கழகம் தகுதி பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பாடுமீன் விளையாட்டு கழக உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்