பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிபொருள்இ, எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படும் நிவாரண பட்ஜெட்டில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், செயல்முறையை வலுப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.