மகளுக்கு மகாலட்சுமி என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதி
இஸ்லாமிய தம்பதிகள் தமது குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர்சூட்டிய சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கோலாப்பூர் – மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த 6 ஆம் திகதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் தயாப் ஆகிய இருவரும்பயணம் மேற்கொண்டனர்.
ரயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பாத்திமாவுக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்தது.இதையடுத்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில் கர்ஜத் ரயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில், குழந்தை ரயிலில் பிறந்ததால் ரயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ரயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் போது குழந்தை பிறந்ததால் அந்த மகாலட்சுமியுடன் ஒப்பிட்டு கூறினர்.
இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்து குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்