காலத்திற்கு காலம் வந்த அரசியல் தலைவர்களின் போலி வாக்குறுதிகளால் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – வைத்தீஸ்வரா கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறையை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
“தற்போது வாக்குறுதிகளால் விரக்தியடைந்த மக்கள், செயற்பாட்டு அரசியலை கோருகின்றனர்.
அதனையே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து நிறைவேற்றி வருகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி ஒன்று இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டதில்லை.
இதுவே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாகும்.
எமது ஆட்சியின் கீழ் நிச்சயமாக அரசியலமைப்பில் உள்ள 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்“ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
