சிலாபம் பகுதியில் சேவையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் போலியான பொலிஸ் அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நேற்று புதன்கிழமை மாரவில பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது சிலாபம் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று கூறி தனது அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை நடத்தியதில், சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் போது சேவையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.