எமது மின்னல்24 செய்திகளின் அரசியலின் மறுபக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் சமூக வலைத்தளத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள போலியான செய்தியை எமது நிறுவனம் மறுக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த சனிக்கிழமை ஒரு நேர்காணலிற்காக எமது கலையகத்திற்கு வருகை தந்திருந்தார்.
குறித்த நேர்காணல் ஒளிப்பதிவில் ஏற்பட்ட சிறு தடங்கல் காரணமாக பதிவிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை பயன்படுத்தி போலி செய்திகளை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில் குறிப்பிடப்படுவது போன்று எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்து கொள்கிறோம்.
ஆகவே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் விடயங்கள் உண்மை இல்லை எனவும் இதற்கு எமது நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகம்
மின்னல்24செய்திகள்
