![](https://minnal24.com/wp-content/uploads/2024/06/Untitled-design-8.png)
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் காசாவின் தெற்கு பகுதி முழுவதும் வான்வழித்தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், காசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்