கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் ,பொது மக்கள் என பலரும் பங்கேற்றனர்.