-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான நபரொருவர் நேற்று திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்கு பணத்தினை கேட்டுள்ளார், சகோதரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வீட்டினுள் சென்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.