மினுவங்கொடை பன்சில்கொட பகுதியில் உள்ள இலங்கை தனியார் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கம்பஹா, கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடுமையான சுகவீனம் காரணமாக மினுவாங்கொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்