போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 30 வேக துப்பாக்கி கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த கருவியின் மூலம் 200 மீட்டர் தூரத்திலிருந்தும் வாகனங்களின் வேகத்தை கண்டறிய முடியும் எனப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணவாலா தெரிவித்தார்.
மேலும், வாகனத்தை செலுத்தும் வேகம், ஓட்டுனரின் புகைப்படம், வாகனத்தின் எண் உள்ளிட்ட பல தகவல்களையும் இதன் மூலம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.