அண்மையில் ஏற்பட்ட பேரிடர் அனத்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டு கிளிநொச்சிஇ யாழ்ப்பாணம்இ வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்கணை பகுதி வரை தமது சேவையை முன்னெடுத்துள்ளனர்.
அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்கணை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளனர். இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்