நிலாவெளியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு செல்லவிருந்த பெண்ணொருவருக்கு, நிலாவெளி பொலிஸ் நிலையத்தின் ஊடாக பொலிஸ் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, குறித்த கான்ஸ்டபிள் 10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இன்று புதன்கிழமை குச்சவெளி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்