பொலிஸ் உத்தியோகத்தர் மீது கண்ணாடி துண்டுகளால் தாக்குதல்

காலி – களுவெல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் உடைந்த கண்ணாடி துண்டுகளால் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதத்தால் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு காலி பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த காலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பின்னர் குறித்த சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்