போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தேடப்படும் சந்தேக நபரை, கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
தெவிநுவரவைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேடப்படுகிறார், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், 071-8591876 என்ற இலக்கத்தின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.