2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 தேர்வு மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு உரையாற்றிய போது இந்த ஆண்டு 474,147 மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர் என்றார்.
பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் சபாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அமித் ஜெயசுந்தர கூறினார்.
அனைத்து பாடசாலை அதிபர்களும் மாணவர்களுக்கு அனுமதி அட்டைகளை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டார்.
இன்னும் அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கலாம் என
தனியார் பரீட்சார்த்திகள் இது தொடர்பாக நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.