நாட்டில் கையிருப்பில் உள்ள சுமார் 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை மியன்மார் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்கி, அங்கிருந்து அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.