பண்டாரவளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின்போது பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து இன்று காலை நெலுவ செஞ்ஜோமிஸ் கீழ் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
நெருக்கமான வளைவுகளும் பாரிய பள்ளதாக்கையும் உடைய குறித்த பகுதியூடாக பயணிக்கையில் பேருந்தின் சக்கரத்தில் ஏற்பட்ட முறிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இவ்வாறான ஆபத்தான் வீதியில் பயணிக்கும் பேருந்துகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.