-மூதூர் நிருபர்-
இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் நாளை திங்கட்கிழமை புனித நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக வீடுகளில் கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் கொண்டாட்டத்திற்காக வீடுகளில் இனிப்பு பண்டங்களை தயார் செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
புனித நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் நாளையதினம் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.