பிரிட்டன் நாட்டில் நபர் ஒருவர் தன்னுடன் வசித்த நபர் உயிரிழந்ததை மறைத்து இரண்டு ஆண்டு காலம் அவரது பென்ஷன் பணத்தை பயன்படுத்தி ஏமாற்றி வாழ்ந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் டேமியன் ஜோன்சன். 52 வயதான இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இவருடன் ஜோன் வெயின்ரைட் என்ற நபரும் வசித்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில்இ 2018ஆம் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜோன் உயிரிழந்துள்ளார்.
தன்னுடன் வசிக்கும் நண்பர் உயிரிழந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்த ஜோன்சன் அவரது உடலை அடக்கம் செய்யாமல் சுமார் இரண்டு ஆண்டுகள் பிரிசர் பெட்டியில் வைத்து பதப்படுத்தியுள்ளார்.
ஜோன் உயிரிழந்ததை மறைத்து சுமார் இரண்டு ஆண்டுகள் அவரின் பென்சன் பணம் உள்ளிட்ட நிதிகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஜோன் 2018இல் இறந்த நிலையில், இந்த உண்மை 2020ஆம் ஆண்டில் தான் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து ஜான்சன் மீது மோசடி புகார் பதியப்பட்டு வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
உயிரிழந்த ஜானின் பணம் தனக்கு உரிமைபட்டது தான் என நீதிமன்றத்தில் ஜோன்சன் தெரிவித்தார். இருப்பினும், வழக்கு தன்மை கருதி மன்னிப்பு கோரிய அவர், உயிரிழந்ததை மறைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜோன்சன் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில் வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் பணத்திற்காக ஒருவர் இறந்ததை மறைத்து உடலை இரண்டு ஆண்டுகள் ப்ரீசரில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.