-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 வீட்டுத்தோட்ட பெண் பயனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் விதைகள் வழங்கும் நிகழ்வு மூதூர் -திரிசீடி மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
பெண்களை தொழில் ரீதியாக முன்னேற்றும் நோக்கத்துடன் விழுதுகள் அமைப்பினால் இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு வீட்டுத்தோட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். அத்தோடு விவசாய் போதனாசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விழுதுகள் அமைப்பின் உத்தியோகத்தர்கள் டீ.ஹிஸாம் ,ஐ.இதயராணி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

