அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல்லை உண்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
மேலும் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளன.
தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.