கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளது.
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, இந்த பந்தல் 25 ஆவது தடவையாக வியாபாரிகள் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் பந்தல் பின்னோக்கி சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
