முருங்கன் பகுதியில் வைத்து புராதன காலத்து விநாயகர் சிலையுடன் நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெறுமதி மிக்க புராதன காலத்து விநாயகர் சிலையொன்றை நபர் ஒருவர் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த நிலையிலேயே சிலையுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்றில் பயணித்த பயணியொருவரே இவ்வாறு குறித்த சிலையை மறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.