தனமன்வில – பட்டுவெவ பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனமன்வில பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கூரியஆர – தனமன்வில பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.