புகைத்தல் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பு

இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வருடாந்தம் இலங்கையில் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகரெட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன.

சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.

மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன.

நாட்டில் அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்த போதும், சிகரெட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரெட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை, என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.